Categories
உலக செய்திகள்

ஆய்வகத்தில் கொரோனா உருவாகவில்லை அந்த இடத்தில தான் தோன்றிருக்கு – அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் பகிரப்பட்ட உளவு குழு கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளிவர வில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து மிகவும் வலுவான அறிக்கை ஒன்றை நாங்கள் வெளியிடுவோம். அது சரியான முடிவாக இருக்கும் என நேற்று அதிபர் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஐந்து நாடுகள் சேர்ந்து ஐந்து கண்கள் உளவு பகிர்வு கூட்டணி என்ற அமைப்பு வெளியிட்ட தகவலின்படி கொரோனா வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து உருவாகவில்லை மாறாக அங்கிருக்கும் கடலுணவு சந்தையிலிருந்து உருவாகி இருப்பதாக கூறியுள்ளனர். அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என ஐந்து நாடுகளால் ஏற்படுத்தப்பட்டு உளவு பகிர்வு கூட்டணி பரந்த உளவுத்துறை தகவல்களை இந்த அமைப்பு நாடுகள் அளவில் பகிர்ந்து கொள்கின்றனர்.

உளவுத்துறை அறிவு கொண்ட மேற்கத்திய தூதரக அதிகாரி கூறும்போது கொரோனா தொற்று ஒரு விபத்து என நாங்கள் நினைக்கவில்லை. இயற்கையாகவே இது நடந்திருக்கலாம் மனிதனுக்கு நோய்தொற்று விலங்குகளின் தொடர்பில் இருந்து மனித தொடர்பில் இருந்தும் வந்திருக்கும். ஐந்து கண்கள் உளவுத்துறை கூட்டணி இந்த மதிப்பீட்டை ஒன்றிணைகின்றன எனக் கூறினார். அந்த ஐந்து கண்கள் உளவு அமைப்பை சேர்ந்த இரண்டாவது அதிகாரி அமெரிக்கா இன்னும் முறையான மதிப்பீட்டை பகிரங்கப்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

உளவு குழுவினரிடம் இருந்து வந்த இந்த மதிப்பீடு சமீப நாட்களாக டிரம்ப் மற்றும் பாம்பியோ கூறிய கருத்துகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த தகவலை அதிபர் டிரம்பின் நிர்வாகம் தனது கூற்றை அழிப்பதற்கான ஆதாரங்களை வழங்க அதிக அழுத்தத்தை கொடுக்கும். ஜனாதிபதி மற்றும் அவரது தூதரிடம் இருந்து பயங்கரமான பேட்டியை மீறி ஆதாரங்களை கொடுப்பதற்கு தவறிவிட்டனர். அமெரிக்க உயர்மட்ட தொற்றுநோய் நிபுணரான டாக்டர் அந்தோணி நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்  “கொரோனா தொற்று ஆய்வகத்தில் உருவாகி இருப்பதை நான் நம்பவில்லை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |