மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வந்த கொரோனா தற்போது விலங்குகளுக்கு செல்லப்பிராணிகளுக்கு பரவ தொடங்கியுள்ளது
உலகம் முழுவதிலும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்களிடமிருந்து செல்லப் பிராணிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் பிரான்சில் முதல்முறையாக பூனை ஒன்றுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று Val-De-Marne பகுதியிலிருக்கும் Alfort கால்நடை மருத்துவமனையில் அந்தப் பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர் மருத்துவர்கள். அதன் உரிமையாளரிடம் இருந்து தொற்று அதற்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது. பூனையின் உரிமையாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகநாடுகளில் ஹாங்காங், அமெரிக்கா, சீனா, பெல்ஜியம் என நான்கு நாடுகளில் மனிதர்களிடமிருந்து செல்லப்பிராணிகளுக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே உடல் நலம் சரி இல்லாதவர்கள் தங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்கும்படி கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.