கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கத்துடன் மதுவிலக்கு காவல்துறையினர் ரேவதி தலைமையிலான குழு கல்வராயன்மலைப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டது.
இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தாழ்பாச்சேரி விளாம்பட்டி கரு நெல்லி, தொரடிபட்டு, உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 660 கிலோ வெல்லமும் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 440 லிட்டர் எரிசாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.