ஹாங்காங்கில் இருக்கும் விமான நிலையத்தில் 40 வினாடிகளில் கொரோனா தொற்றை கொல்லும் அறை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
ஹாங்காங் விமான நிலையத்தில் சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட இந்த அறையின் உள்ளே பூசப்பட்டுள்ள கிருமிநாசினி மனிதர்கள் மீது இருக்கும் கொரோனா தொற்று வைரஸ் உட்பட அனைத்து கிருமிகளையும் கொள்ளக்கூடியது. ஒருவர் அறைக்குள் சென்ற 40 வினாடிகளில் அனைத்து கிருமிகளும் உயிரிழந்து விடும்.
உலகிலேயே முதன்முறையாக CLeanTech sanitation pods எனப்படும் இந்த அறைகளை பயன்படுத்துவது ஹாங்காங் விமான நிலையம் தான். விமான நிலைய செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இந்த அறையில் nano ஊசிகள் மற்றும் photocatalyst முறையையும்,, கிருமிநாசினி ஸ்பிரே ஒன்றையும் நுண்ணுயிர்களை கொள்ள பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.