போதைப்பொருள் பயன்படுத்த அனுமதி அளித்த வடகொரிய அரசு அந்நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடை விதித்துள்ளது
உலக நாடுகளில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாட்டுடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளாத வடகொரியாவில் பல சட்டங்கள் விசித்திரமாகவே உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான வடகொரியாவில் 25 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடகொரியா உருவான காலத்திலிருந்து கிம் ஜாங் உன்னின் குடும்பமே ஆட்சியில் இருந்து வருகின்றது. கிம்மின் தாத்தாதான் வடகொரியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார்.
1980 ஆம் காலகட்டத்தில் வடகொரியாவில் வித்தியாசமான சட்டம் ஒன்று அமலுக்கு வந்தது. அதாவது வடகொரியாவின் குடிமகன் ஒருவன் குற்றம் செய்தால் அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது மொத்த குடும்பமும் சிறையில் அடைக்கப்படும். இன்றளவும் வடகொரியாவின் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே சரியான அனுமதிபெற்று இணையத்தை உபயோகப்படுத்துகின்றனர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையில் சுமார் 1000 முதல் 5500 இணையதள பக்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவில் இருந்து அரசு அனுமதியின்றி யாராலும் வெளியேற முடியாது.அதோடு 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் மூன்று மில்லியன் மக்கள் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தொலை பேசி அழைப்புகள் மூலம் பேசினால் அது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.
இந்த குற்றத்திற்கு 2007 ஆம் ஆண்டு மரண தண்டனையும் ஒருவருக்கு விதிக்கப்பட்டது வடகொரியாவில் சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ளும் உரிமை அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது. அவர்கள் மட்டுமே சாலையை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு வருடமும் ஜூலை எட்டாம் தேதி வட கொரியா நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் தான் வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் இல் சுங் இறந்துள்ளார். எனவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகொரியாவில் போதை மருந்து பயன்பாட்டிற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் போதைப்பொருட்களை பயன்படுத்தலாம்.