Categories
தேசிய செய்திகள்

96 வயதில்….. தொடர் சாதனை…… மூதாட்டிக்கு குவியும் வாழ்த்துகள்….!!

கேரளாவில் 96 வயது மூதாட்டி முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு தனது இரண்டு மாத ஓய்வூதியத்தை அளித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை அடுத்த ஹாரி பாட்டை என்னும் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டியான கார்த்தியாயினி என்பவர் ஏழ்மையின் காரணமாக தனது இளம் வயதில் படிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

இந்நிலையில் முதியோர் கல்வி பயின்று வந்த இவரை பலர் இந்த வயதில் இதெல்லாம் தேவையா எனக் கிண்டல் செய்தனர். ஆனால் இவர் சமீபத்தில் 96 வயதில் 98சதவிகிதம் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில் தமது படிப்பறிவை காட்டும் விதமாக முதலமைச்சரின் கொரோனா நிதிக்காக தனது இரண்டு மாத ஓய்வூதியத்தை அளித்து உதவி செய்துள்ளார். இவரது மனமார்ந்த செயலுக்கு அம்மாநில மக்கள் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |