Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி..!

காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் சென்றவர் மூலம் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குன்றத்தூரில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று 3ம் கட்டமாக ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 23 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், தூத்துக்குடி, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் பஞ்சை மண்டலங்களாகவும் உள்ளது. சிவப்பு மண்டல பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |