Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இளமை துடிப்போடு செயல்பட இந்த உணவுகளையே சாப்பிடுங்கள்…!!

உடலில் 4 நாளிலேயே இரத்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டாலே போதும். அப்படியான 5 உணவுப் பொருட்களைப் பற்றி பார்க்கலாம்.

தினமும் காலையில் தொடர்ந்து நாலு நாளைக்கு ஒரு டைம் மட்டும் இத சாப்பிடுங்க 75 வயதிலும் 25 வயதிற்கு உண்டான எனர்ஜி கிடைக்கும், சுறுசுறுப்போடும், ரத்தக் குறைபாடு இல்லாமலும் இருக்கலாம். நம் உடலில் ரத்தம் போதுமான அளவு இருந்தாலே போதும். எனர்ஜியும், சுறுசுறுப்பும் தானாகவே வந்துவிடும். அதற்கு உடலில் ரத்தத்தை அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உடலில் ரத்தக் குறைபாடு வருவதற்கு முக்கிய காரணம் இரும்புச்சத்து,வைட்டமின் பி, காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் குறைபாடு தான். இன்னும் சிலருக்கு வயது குறைபாடுகளையும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்க்கான அறிகுறிகள், வெளிரிய கண், வெளிரிய நகம், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, படபடப்பு, மூச்சுத் திணறல், மயக்கம், பித்தம், மாதவிடாய் பிரச்சனை உடலில் ரத்தக் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

வெந்தயம்:

வெந்தயத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து, கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன் போன்ற மினரல்கள் அதிகம் உள்ளது. இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தையும் அந்த தண்ணீரையும் சேர்த்து சாப்பிட்டால், 4 நாளிலேயே உடலில் ரத்தம் மளமளவென்று ஊற ஆரம்பித்துவிடும்.

ரத்தம் குறைபாட்டினால் வரக்கூடிய உடல் சோர்வு, உடல் வலி இல்லாமல் எப்பொழுதுமே 75 வயது மாதிரி இல்லாமல் 25 வயது போல எனர்ஜியோடு இருக்கலாம். அது மட்டுமில்லாமல் வெந்தயம் சாப்பிட்டால் உடல் சூடு குறையும், கொலஸ்ட்ரால் குறையும், அதனால் இதய சம்பந்தமான பிரச்சினையும் வராது. மலச்சிக்கல் பிரச்சனையும், சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேற்றும்.  உடலில் ரத்தத்தையும், ரத்த ஓட்டத்தையும் அதிகமாக்கும்.

மாதுளை:

தினமும் காலையில் மாதுளை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் இருக்கக்கூடிய விட்டமின் சி இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், ஆன்டிஆக்சிடன்ட், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்து, உடலில் ரத்தத்தை அதிக அளவில் ஊற வைக்கும். அதுமட்டுமில்லாமல் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கச் செய்து, உடல் சுறுசுறுப்பு இல்லாதவர்களுக்குக் கூட பலத்தையும், சுறுசுறுப்பையும் உண்டாகும்.

ஞாபகமறதி தன்மையை போக்கி மூளையை எப்பொழுதும் ஷார்ப்பாக வைத்திருக்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைத்து, ஹார்ட் அட்டாக் வருவதை தடுக்கும். எலும்பு தேய்மானத்தை தடுக்கும், மூட்டு வலி, இடுப்பு வலி, உடல்வலி வருவதையும் குறைக்கும். எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும். அதனால் மாம்பழம், வாழைப்பழம் சாப்பிட பிடிக்காதவர்கள் ஜூஸ் கூட குடிக்கலாம்.

உலர்ந்த திராட்சை:

கிஸ்மிஸ் திராட்சை இதில் விட்டமின் பி, சி, போலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம் பொட்டாசியம், மெக்னீசியம் இருக்கிறது. உலர்ந்த திராட்சையை முன்னாடி நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து அல்லது காலையில் ஒரு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால், நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உடலில் இரத்தம் அதிகரிக்கும் .

ஏனென்றால் இந்த உலர்ந்த திராட்சையில் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வைத்து, உடல் சூட்டை குறைக்கும், மலச்சிக்கலை போக்கும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்பையும், வலியையும் போக்கும். எலும்புகளுக்கும், மூட்டுகளுக்கு பலம் அளித்து எப்போதும் எனர்ஜியுடன் வைத்திருக்கும்.

பனைவெல்லம்:

பனைவெல்லம் அல்லது அச்சுவெல்லம் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம். வெல்லத்தில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. ரத்தக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் காலை ஒரு துண்டு வெல்லத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் தானாகவே இரத்தம் ஊற ஆரம்பித்து விடும். அது மட்டுமில்லாமல் உடலில் அதிக அளவு ரத்தம் ஊறுவது, உடலில் எனர்ஜியும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும். இதுதவிர வெல்லத்தின் பயன்கள் இருமல், சளியை குறைக்கும். தொண்டை புண், தொண்டை வலியை போக்கும். உடலுக்கு நல்ல புஷ்டியை கொடுக்கும்.

எள்:

வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் அதிக சத்துக்கள் இருக்கிறது. அதாவது ஜிங்க் காப்பர், மெக்னீசியம், இரும்புச் சத்து, பைபர் ,ஆன்டி ஆக்சிடென்ட், தினமும்  ஒரு டீஸ்பூன் எள் சாப்பிட்டால் இதில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து ரத்தசோகையை போக்கி உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும், எலும்பு மூட்டு தேய்மானத்தால் வரக்கூடிய ஆபத்தை போக்கி, 75 வயதிலும் 25 வயது போல ஆரோக்கியமாகவும், எனர்ஜி விடவும் இருப்பதற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மன அழுத்தத்தை போக்கும், சரும பிரச்சனையை தடுக்கும்.

இளமையோடு வைத்திருக்க இந்த 5 உணவுப் பொருட்களை அதிகளவில் எடுத்து கொள்ளுங்கள். இவற்றில் இரும்புச்சத்து இருப்பதால் உடலில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ரத்தத்தை ஊறவைக்கும். இந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை மட்டும் தினமும் தொடர்ந்து பயன்படுத்தி உங்கள் உடலில் ரத்தம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

Categories

Tech |