Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து….! விரைவில் அறிவிக்கின்றது அமெரிக்கா …!!

கொரோனா தொற்று பாதிப்புக்கான மருந்தாக ரெமெடிசிவருக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. பலநாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் தொற்றை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நல்ல செய்தியை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் செய்த பரிசோதனையில் ரெமெடிசிவிர் என்ற மருந்துகொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை விரைவில் மீட்க உதவுவதாக சான்று கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று சிகிச்சைக்கு எந்த மருந்திற்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆனால் நியூயார்க் டைம்ஸில் ரெமெடிசிவிர் பயன்பாட்டு அங்கீகாரத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து மருந்து நிர்வாகம் அறிவிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகின்றது. இதுதொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அளித்த அறிக்கையில் ரெமெடிசிவிர் தயாரிப்பாளரான கிலியட் சயின்ஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் நிதி அளிக்கப்பட்ட ஆய்வில் மருந்தை உட்கொண்ட நோயாளிகள் மற்ற நோயாளிகளை விட மிகவும் வேகமாக குணமடைந்து வருகின்றனர். இதனையடுத்து குணப்படுத்துவதற்கான நேரத்தை குறைப்பதில் தெளிவான நேர்மையான விளைவை ரெமெடிசிவிர் கொண்டிருப்பதாக தகவல்கள் காட்டுகின்றது என மருத்துவர் அந்தோணி பாக்ஸில் அதிபர் தம்மை சந்தித்த பொழுதும் கூறியுள்ளார்.

Categories

Tech |