Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வெயிலில் ஜில்லுனு இருக்க….அற்புத இயற்கை பானங்கள்…!!

கடும் வெயிலால் ஏற்படும் தாக்கம் மற்றும் நா வறட்சியைப் போக்க எளிமையான இயற்கை பானங்கள் தயாரிக்கும் முறை என்னவென்பதை பார்க்கலாம்.

தயிரை சுத்தமான மண் சட்டியில் ஊற்றி ஐஸ் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அதை அப்படியே மோரில்  சேர்த்துவிட்டால் தாளித்து மோர் தயாராகிவிடும்.

கேரட் மற்றும் ஆரஞ்சு பழம் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதோடு சிறிதளவு பொடியாக நறுக்கிய புதினா இலைகள் ஐஸ் கட்டிகள் சேர்த்தால், கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் தயார்.இதை குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

தர்பூசணி சாறு மற்றும் எலுமிச்சை சாறு, இளநீர், தேன், நறுக்கிய புதினா இலைகள், ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கினால் தர்பூசணி சாறு தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த இயற்கை பானங்களை குடிப்பதால் நமது ஆரோக்கியமும் மேம்படும்.

Categories

Tech |