கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.
மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 திட்டம் நிறைவடைந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து நியாயவிலை கடைகளிலும் 99% தங்களுக்கான ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 2.0 கோடி பேரில் 1.98 கோடி அட்டைதாரர்கள் ரூ.1000ஐ பெற்றுள்ளனர். மேலும் ஏப்ரல் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை 96% பேர் பெற்றுள்ளனர் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.