நடிகை ஜோதிகா விழாவில் குறிப்பிட்ட இராசா மிராசுதார் மருத்துவமனையில் இருந்து கொடிய விஷத்தன்மையுள்ள 5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகை ஜோதிகா, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை ரொம்ப மோசமாக உள்ளது.. என் வாயால சொல்ல முடியல என பேசினார். மேலும் கோயிலுக்கு காசு கொடுக்குறீங்க.. உண்டியலில் காசு போடுறீங்க.. அதேகாச பள்ளிகள் மற்றும் மருத்துவமனை கட்ட கொடுங்க என்று கேட்டுக்கொண்டார்..
ஆனால் இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. அதாவது, அவர் உண்டியலில் காசு போடாதீங்கன்னு சொல்லவில்லை.. கோயிலுக்கு காசு கொடுப்பதை போலவே ஆஸ்பத்திரி, மருத்துவமனை கட்டுவதற்கு கொடுங்க என்றார்..
இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒருபுறம் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது.. இந்த சூழலில் ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டு எதிர்த்தவர்களின் வாயை அடைத்தார்..
