“சிரிப்பு” விலங்குகளிடமிருந்து மனிதர்களை தனித்துவப் படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு சிரிப்பிற்கு உண்டு. மனிதன் சிரிப்பதனால் புத்துணர்ச்சி பெறுகிறான். அதுமட்டுமில்லாது குழந்தைகள் சிரிப்பினால் பலரது உள்ளங்களை கொள்ளை கொள்வார்கள். ஆனால் உலக சிரிப்பு தினம் எதனால் கொண்டாடப்பட்டது? எப்போது கொண்டாடப்பட்டது? என்பது பலரும் அறியாத ஒன்று.
மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினமாக கொண்டாட படுகின்றது. ஆனால் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள் தான் மதன் கட்டாரியா என்பவரால் சிரிப்பு தினம் தொடங்கப்பட்டது. மதன் கட்டாரியா இந்த நாளை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக அறிமுகப்படுத்தினார். இன்று 65 நாடுகளில் 6 ஆயிரம் சிரிப்பு கிளப் நடந்து வருகிறது. ஏன் இந்த சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் உடம்புக்கும் மனசுக்கும் சிரிப்பு நல்லது இதை வலியுறுத்தி தான் இந்த தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.