Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி ஒரு நீண்ட ஓய்வு…! ” எனது வாழ்க்கையில் வந்தது இல்லை” குமுறிய ராகுல் பிரீத் சிங்….!!

இதுவரை என் வாழ்வில் இப்படி ஒரு நீண்ட ஓய்வு இருந்ததே  இல்லை என தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். 

நாடும் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து திரைபிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் இருந்து செய்யும் பொழுது போக்கு குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியது என்ன.?

நம் வாழ்க்கையில் லட்சியத்தை அடைவதற்கு தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இயற்கையால் ஒரு விபத்து என்றால் எந்த அளவிற்கு நம்மால் தாங்கி கொள்ள முடியும் என்பதையும், நமக்குள் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதையும் கொரோனா இப்பொழுது நம் அனைவருக்கும் உணர வைத்திருக்கிறது. நம்முடைய ஆரோக்கியம், குடும்பம், நம்மை நேசிப்பவர்கள், அவர்களோடு நாம் இருந்த நினைவுகள் விலை மதிக்க முடியாததாகும்.

மார்ச் 18-ந்தேதி நான் கடைசியாக சினிமாவில் வேலை பார்த்த நாள். அதன்பிறகு வீட்டில் தான் இருக்கிறேன். காலையில் எழுந்ததும் யோகா பயிற்சியோடு எனது நாளை தொடங்குகிறேன். அதன்பின் புத்தகங்கள் படிக்கிறேன். மதியம் வேளையில் சமூக வலைத்தளங்களை பார்க்கிறேன். மாலைநேரத்தில் படம் பார்க்கிறேன். சில வெப் தொடர்களையும் பார்த்து ரசிக்கிறேன். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்களையும் பார்ப்பேன். சமையல் செய்கிறேன். நம்மை நாமே பலம் நிறைந்தவராக மாற்றி கொள்வதற்கு இதுதான் உகந்த நேரம்.

இந்த நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று நான் தெரிந்து கொண்டேன். இந்த நீண்ட ஓய்வு இதுவரைக்கும் என்னுடைய வாழ்வில் வந்தது இல்லை.

Categories

Tech |