Categories
உலக செய்திகள்

7ஆவது மாடியில் இருந்து தனது மனைவியை தூக்கி வீசிய நபர்… இதுதான் காரணமா!

தாய்லாந்தில் மனைவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய பிரித்தானிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்க படுவதால் வீட்டிலேயே இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவ்  மிட்செல்(45) தற்போது தாய்லாந்தில் இருக்கிறார். ஊரடங்கால் மனக்குழப்பம் அடைந்த  டேவிட் செல் வாக்குவாதத்தின் இடையே தனது மனைவி சுகந்தவை(56) ஏழாவது மாடியில் இருந்து தூக்கி போட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ உதவிகுழு சம்பவ இடத்திற்கு சென்ற சுகந்தவுக்கு  முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தாவிடம் மேற்கொண்ட விசாரணையில் வாக்குவாதத்தின் இடையே தனது கணவர் தன்னை தூக்கி வீசியதாக சுகந்தா காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக இரண்டு கட்டடங்களுக்கு இடையே இணைக்கப்பட்ட தடுப்பில் விழுந்ததால் உயிருக்கு சேதாரமில்லாமல் இடுப்பு உடைந்து கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த சுகந்தாவின் கணவர் மிட்செலை  காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் சுமார் 2 மணி நேரம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மறுப்பு தெரிவித்த மிட்செலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குடியிருப்புக்குள் புகுந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மிட்செலிடம் விசாரணை மேற்கொண்டதில் ஊரடங்கினால் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் பிரித்தானியாவிற்கு திரும்ப செல்வதற்கு பல முறை முயற்சித்தும் முடியவில்லை எனவும் தினமும் இரவு 10 மணி வரை வீட்டிலேயே அடங்கியிருப்பதால் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுகன்யாவிடம் விசாரணை மேற்கொண்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |