Categories
தேசிய செய்திகள்

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்: ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!

மத்திய அரசு ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பான நிலை (Safe status) காட்டும்போது அலுவலகம் வர மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,696 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் மொபைலில் உள்ள செயலியின் மூலம், “நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நபரின் அருகில் உள்ளீர்கள்” என நமக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தற்போது அதேபோன்ற ஒரு செயலியை இந்தியாவும் உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. `ஆரோக்கிய சேது’ (Aarogya Setu) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தச் செயலியானது இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ‘National Disaster Management Authority’-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச் செயலியில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 11 மொழிகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்யவேண்டும் எனவும், அதில் பாதுகாப்பு நிலையை காட்டும் போது அலுவலகம் வரவேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Categories

Tech |