பெருந்தலைவர் காமராஜர் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் எளிமையானவர் கல்வி கண் திறந்தவர் போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் தற்பொழுது காமராஜர் பற்றி அறியாத மற்றொரு தகவலை பார்ப்போம் ,
நேரு பிரதமராக இருந்த நேரத்தில் டெல்லியில் உலகக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது . அதன் துவக்க விழாவுக்கு நேருவும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .அவர்களுடன் மத்திய மந்திரிகள் சிலரும் கலந்து கொண்டார்கள் எல்லாரும் பலவிதமான அறிவியல் சிந்தனைகளை பார்த்து அதிசயப்பட்டு கண்காட்சியை சுற்றி வந்தனர் கண்காட்சியில்தான் எடை பார்க்கும் இயந்திரம் முதல் முதலாக அறிமுகமாகி இருந்தது அதன் மேலே ஏறி நின்று காசு போட்டு எடை பார்த்தார் நேரு மற்ற மத்திய மந்திரிகளும் ஏறி நின்று காசு போட்டு எடை பார்த்தார்கள் காமராஜர் மட்டும் இதில் தலையிடாமல் ஒதுங்கி நின்றார் .
நேரு காமராஜரை விடுவதாக இல்லை நேரு கட்டாயப்படுத்தினார்ர ஆனாலும் காமராஜர் எடை பார்க்கவில்லை. அப்போ நேரு உடனிருந்தவர்கள் திகைத்து போயிட்டாங்க ஒரு பிரதமர் சொல்றாரு இவர் மறுக்கிறார் என்று அப்போது நேரு காரணம் எனக்கு தெரியும் இந்த எடை மெஷின் ஏறுவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று காமராஜரிடம் நேரு கையில் காசு கொடுத்து எடை பார்க்க வைத்தார் ஒரு நாட்டோட முதல்-மந்திரி தனக்காக கையில் ஒரு காசு கூட வைக்கவில்லை அது அவருக்கு பெரிய விசயமாக தெரியவில்லை
ஏனென்றால் பணம் சம்பாதிப்பது அவருக்கு பெரிய விஷயமாக இல்லை நல்லாட்சி நடக்கணும் மக்களுக்கு நல்லது நடக்கணும் ஏழ்மையை போக்கணும் இது தான் அவருடைய நோக்கம் இன்னைக்கு பலர் பணம் சம்பாதிப்பதை வைத்து குடும்பத்தார்க்கு பாசத்தை கொடுக்காமல் சொந்தங்களுக்கு நேரத்தை ஒதுக்காமல் ஒரு இயந்திரமாக வாழ்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை பற்றி பைபிள் என்ன சொல்கிறது பண பிரியன் பணத்தினால் திருப்தி அடைவதில்லை செல்வ பிரியன் செல்வத்தினால் திருப்தி அடைவதில்லை