Categories
தேசிய செய்திகள்

“கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு? “: யு.ஜி.சிக்கு பரிந்துரை…!

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வியால் உயர் கல்வித்துறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காட்டத் துவங்கிய உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கல்லுரிகள், பள்ளிகள் மூடப்பட்டன.

பள்ளி மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டனர். இந்த நிலையில், நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் தேர்வு நடத்துவதை ஒத்திவைத்தன. இதையடுத்து கொரோனா காலம் முடிவுக்கு வந்த பிறகு இந்த தேர்வுகளை எப்படி நடத்துவது?, விடைத்தாள்களை எப்படி திருத்துவது?, எந்த மாதிரி முடிவுகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் குழு அமைத்து பரிந்துரைகளை தரவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் அரியானா மாநிலத்தி சேர்ந்த முன்னாள் துணைவேந்தர் குஹத் என்பவற்றின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு ஆய்வுகளை செய்து சில பரிந்துரைகளை யு.ஜி.சி- பல்கலைக்கழக மானிய குழுவிடம் அளித்துள்ளது. அதில் 19 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அதில், ” கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பலகலைக்கழகங்களில் நடைபெறும் 5 நாள் வகுப்புகளை 6 நாட்களாக நடத்தலாம். ஓபன் டெக்ஸ்ட் புக் என்ற நடைமுறையை அமல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுதும் நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கலாம். செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து கல்லூரிகளை துவக்கலாம். மிக முக்கியமாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றிற்கு பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படலாம் என்ற பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த நுழைவுத்தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்தி அதனடிப்படையில் மாணவர்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கலாம்” என்ற பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |