Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு பூ சந்தை மாதவரத்திற்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து மே 3ம் தேதி வரை பந்த் அறிவிப்பு!

கோயம்பேடு பூ சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ம் தேதி வரை பந்த் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்த பூக்கடைக்காரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு காய்கறி சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

இதனிடையே கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வது குறித்து நேற்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை வரும் வியாழக்கிழமை முதல் மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இட நெருக்கடியை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது என கூறப்பட்டது. இதற்கு பூ வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாதவரம் செல்வதில் போக்குவரத்து பிரச்னை உள்ளது என்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் குளிர்பதன கிடங்கு வசதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாதவரத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ம் தேதி வரை பந்த் என பூ வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |