Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள்: இந்தியாவிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி..!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.

இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சுமையை குறைக்க ஆசிய வங்கி கடனுதவி அளித்துள்ளது. சீனாவில் உருவான வைரஸ் உலகளவில் சுமார் 180 நாடுகளை வதைத்து வருகிறது. உலகளவில், 3,079,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தியாவிலும் பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மொத்த எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்நெத்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரவ ஆரம்பித்த நிலையில் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார இழப்பு அதிகரித்துள்ளது. அதனை சரி செய்யும் வகையில் ஆசிய வளர்ச்சி வங்கி தற்பொழுது சுமார் 1.5 பில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளது. நம் நாட்டு பணத்திற்கு ரூ.11,387 கோடி ஆகும்.

Categories

Tech |