நடிகை ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது.இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன்.
சுமார் இருபது நாட்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் இதை மதம் சார்ந்து சர்ச்சையை கிளம்பினர். இந்து மதத்தையும், தஞ்சை பெரிய கோவிலையும் இழிவாக பேசி இருக்கிறார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். இது சமூக ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகாவின் கருத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோவில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளில் உயர்வாக கருத வேண்டும் என்று ஜோதிகா வலியுறுத்திய கருத்தை விவேகானந்தர், ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள். பள்ளிகளுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்துத் சிந்தனை. நல்லவர்கள் சிந்தனையை படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்ற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சொல்கிறார்கள். ஜோதிகாவின் கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.