Categories
இந்திய சினிமா சினிமா

ரூ. 2,00,00,0,00…! ” மும்பை போலீசுக்கு அதிர்ஷ்டம்”….அள்ளி கொடுத்த அக்‌ஷய்குமார்..!!

கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் 2 கோடி நிதி வழங்கி உதவி செய்துள்ளார்.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.  கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். ஊரடங்கால் வருமானம் இன்றி ஒரு வேளை உணவிற்கு கூட இன்றி தவித்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி கொரோனா ஊரடங்கால் நாட்டில் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகின்றனர். அதுபோலவே இதற்கு அனைத்து மொழி திரை நட்சத்திரங்களும் நிதி வழங்கி உதவிகள் பல செய்து வருகின்றனர்.  இதை அடுத்து பிரதமருக்கு கொரோனா நிவாரண நிதியாக ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார்   ரூ.25 கோடி வழங்கியுள்ளார். இச்செயலுக்காக அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டியுள்ளனர்.

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை தயார் செய்வதற்கு இந்த தொகையை அவர் வழங்கியுள்ளார். சமீபத்தில் இவர் மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்காக 2 கோடி நிவாரணத் தொகையாகவும் வழங்கியுள்ளார். இச்செயலுக்காகவும் மும்பை கமிஷ்னர் டுவிட்டரில் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு மனமார்ந்த நாரி என தெரிவித்துள்ளார்.

நடிகர்  அக்‌ஷய்குமார்  அதற்கு அளித்த பதில்;

மும்பை போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் சந்திரகாந்த் பென்டுர்கர், சந்தீப் சர்வே ஆகியோருக்கு எனது சல்யூட். கொரானோ போராட்டத்தில் அவர்களது உயிரைக் கொடுத்துள்ளார்கள். நான் எனது பணியைச் செய்துள்ளேன், நீங்களும் உங்கள் பணியைச் செய்கிறீர்கள். நாம் அனைவரும் உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்றால் அதற்கு அவர்களும் ஒரு காரணம் என்பதை மறக்கக் கூடாது,” என அதற்கு அக்‌ஷய்குமார் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |