Categories
சினிமா தமிழ் சினிமா

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்…! விஜய் ரசிகர்களை பாராட்டி தள்ளிய மாளவிகா மோகனன்…!!

விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள கார்ட்டூன் டுவிட்டர் பதிவிற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படம் குறித்து, விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மாஸ்டர் படக்குழுவினர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வார்கள் என்றும், நடிகை மாளவிகா மோகனன் சமைப்பது போன்றும், மற்றவர்களின் பொழுது போக்குகள் எனவும் இந்த அம்சத்தின் அடிப்படையில் அந்த கார்ட்டூன் வடிமைத்திருந்தார் அந்த ரசிகர்.

அவர் வெளியிட்ட கார்ட்டூனை பார்த்த நடிகை மாளவிகா மோகனன், அவரது டுவிட்டர் பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும், அதிலும் பெண்களின் வேலை சமையல் செய்வது மட்டும்தானா.? இதுதான் பாலின சமன்பாடா? என்று கேள்வி கேட்டிருந்தார். ஆனால் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர் பதிவிட்ட டுவிட்டை நீக்கி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் விஜய் ரசிகர் ஒருவர் இது போன்ற பதிவு ஒன்றை தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த பதிவில் மாளவிகா மோகனன் சமையல் செய்வது போன்று இல்லாமல், புத்தகம் படிப்பது போன்று இருந்தது. இந்த பதிவில் வெளியிட்டுள்ள படத்தை பார்த்த மாளவிகா ‘நான் இதைத்தான் எதிர்பார்த்தேன் என்றும் இதைத்தான் நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் கூறியது மட்டுமின்றி, நான் புத்தகம் அதிகம் படிப்பேன் என்று எப்படி தெரியும் என்றும் கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார். மாளவிகாவின் இந்த டுவிட் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |