கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று, கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
மேலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கு வருகின்றன. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனவும், மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதில், கோயம்பேடு சந்தையை 3ஆக பிரித்து புறநகர் பகுதிகளில் அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் புறநகர் பகுதியில் கோயம்பேடு சந்தை அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தையை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை ஏற்கவில்லையென்றால் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலோசனை முடிவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது வெளியாகும்.