மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்று மதத்தவர் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். இன்று அடுத்தவர்களின் செயலால் கோபம் உண்டாகும்.
கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுகிறீர்கள். கவனத்தை சிதறவிடாமல் வேலைகளில் கவனம் செலுத்துவது மட்டும் ரொம்ப அவசியம். கூடுதலாக அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். செலவை நீங்கள் தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக நீங்கள் உடலின் ஆரோக்கியத்தை ரொம்ப கவனமாக பாதுகாத்திடுங்கள். வயிறு உப்புசம் போன்ற சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும் கவனம் கொள்ளுங்கள்.
காதலர்கள் தயவுசெய்து கூடுமானவரை வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருங்கள் போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால்சிறப்பாக இருக்கும். பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்