சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு, கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிப்பு தெரிவித்துள்ளனர். கோயம்பேடு மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களை பயன்படுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயம்பேடு வியாபாரிகள் சங்க தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகளுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு சந்தை மூலம் மேலும் 4 பேருக்கு கொரோனா பரவினால் சந்தையை மூட வேண்டிவரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் அளித்துள்ளார்.
–