Categories
சென்னை மாநில செய்திகள் வானிலை

கடும் வெயிலில் மழை..!”12 மாவட்டங்களுக்கு இருக்கு”.. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இந்த காரணத்தால் பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் கடந்து வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகளால் பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே எங்கும் செல்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்த்து விடுகின்றனர். இது மட்டுமின்றி சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையான நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து, வெயிலின் தாக்கத்தை குறைத்து, குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி பூமியை குளிர செய்தது. வேறு சில இடங்களில் மழை மட்டுமல்லாமல் பலத்த காற்றும் அடித்தது. இக்காரணத்தினால் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது.

இதனால், தேனி, நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், இதுபோலவே திண்டுக்கல், கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |