இன்றைய நாளில் மறக்காமல் தானம் செய்யுங்கள், அதற்கு காரணம் உங்களது மறுபிறவியில் அரசனுக்கு இணையாக செல்வந்தர்களாக பிறப்பீர்கள் என்று அர்த்தம், ஐதீகம், நம்பிக்கை.
* நலிந்தோருக்கு உதவி செய்யுங்கள். உங்களது மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி அடைவர்.
* உடைகள்தானமாக கொடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் நீங்கி விடும்.
* பழங்கள் தானமாக கொடுங்கள். உயர் பதவிகள் கிடைக்கும்.
* நீர் மோர், பானகம் ஆகியவற்றை கொடுங்கள். கல்வி அறிவு பெருகி வளம் காணுவீர்கள்.
* தானியங்கள் தானமாக கொடுங்கள். அகால மரணம் மற்றும் விபத்துகள் ஏற்படாது.
* தயிர்சாதத்தை வழங்கினால், பாவ விமோசனமும், வாழ்க்கையில் முன்னேற்றமும் உண்டாகும்.
* புண்ணிய நதியில் நீராடி, இறைவனை இன்றைய நாளில் வழிபட்டால் வாழ்வில் குறைவில்லாத செல்வம் பெருகும்.