நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தமிழகம் பெரிய அளவில் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்தாலும் கொரோனா நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அன்றாடம் பொழப்பு நடத்தும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு பல்வேறு நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் தமிழக மக்களுக்கும், கூலி தொழிலாளர்களுக்கும் வழங்கி வரும் இந்நிலையில், கலைத்துறையை சேர்ந்த மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.