நாளை அட்சய திருதியை வருகின்றது. இந்த நாளில் நாம் வாங்க கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
26.4.2020 சித்திரை மாதம் ஞாயிற்றுக்கிழமை இந்த அக்ஷய திருதியை நாளை வருகின்றது. இந்த நாளில் நாம் தங்கம்தான் வாங்க வேண்டும்.,வெள்ளி தான் வாங்க வேண்டும் என்று எந்த விதமான நிபந்தனையும் எங்கேயுமே சாஸ்திரங்களில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக அது மென்மேலும் சேரும் என்ற நம்பிக்கையுடன் வாங்குகின்றோம்.
இந்நாள்வரை அக்ஷய திருதியை என்று சொன்னால் நம்மிடம் இருக்கக்கூடிய காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் சின்னதா ஒரு பொருள் நாளும் தங்கத்தை வாங்கி விட்டு வருவோம். ஆனால் இப்போது இருக்கக்கூடிய காலத்தில் பொருளாதார நிலையிலும், ஊரடங்கு காலத்திலும் இருப்பதனால் நாம் தங்கமோ, வெள்ளியோ வாங்க முடியாத சூழலில் இருக்கிறோம்.
அதனால் என்ன வாங்குவது என்பதற்கு, மகாலட்சுமி குடி இருக்க கூடிய கல் உப்பை வாங்கி கொண்டு வந்து பூஜை செய்யலாம். மேலும் என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்று பார்க்கும் பொழுது சர்க்கரை, கல்லுப்பு, மல்லிகை பூ, பால் இது போன்ற வெண்மையான நிறங்களை கொண்ட பொருட்களை நாம் வாங்கினால் கண்டிப்பாக நமக்கு செல்வமானது சேரும். நம் வீட்டில் தரித்திரம் நிலையானது விலகி மகாலட்சுமியின் அருளும், ஆசியும் பெற்று ஐஸ்வரியம் மிகுந்த வாழ்வும் நமக்கு கிடைக்கும்.
அதனால் அக்ஷய திருதியை என்று சொன்னால் தங்கம், வெள்ளி தான் வாங்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. உங்களால் உப்பும் வாங்கிவிட்டீர்கள் ஏற்கனவே அப்படி என்றால், மறுபடியும் வாங்கினால் எந்தவிதமான தவறும் கிடையாது. இந்த நாளில் நீங்கள் கண்டிப்பாக பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அது பாலாக இருக்கலாம், சர்க்கரையாக இருக்கலாம் அப்படி இல்லை என்றால் மல்லிகைப்பூ வாங்குவது கூட ரொம்ப நல்லது.
இது போன்று நீங்கள் வாங்கி விட்டு வந்து உங்கள் பூஜை அறையில் வைத்து தெய்வத்தை வழிபடுங்கள். இதை வாங்குவது மட்டும் தான் செய்ய வேண்டும்என்று இல்லை, அக்ஷய திரிதியை என்றாலே தானமும் செய்வது மிக முக்கியமான பலனை நமக்கு தரும். அதனால் இந்த பொருட்களை நீங்கள் தானமாகவும் கொடுக்கலாம். நீங்கள் எவ்வளவுக்கு, எவ்வளவு இந்த நாளில் தானம் செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுடைய ஆயுள் பெருகும்.
திருமண தடை விலகும், அகால மரணம் இது போன்ற விபத்துக்கள் உங்களுடைய வாழ்க்கையில் சம்பவிக்காமல் இருக்கும். அன்னதானம் வழங்கினார்கள் என்றால் உங்களுடைய பரம்பரை எல்லாவிதமான ஐஸ்வரியங்களையும் பெற்று வாழும். அழியாத செல்வத்தை பெறலாம். உங்களுடைய குடும்பத்திற்கு வறுமை நீங்கி செல்வ செழிப்போடு வாழலாம். இந்த நாளில் நாம் வாங்க வேண்டிய மிக முக்கியமான பொருட்கள் இவைகள் தான்.
அக்ஷய திருதியை நாம் இப்படி எதிர்கொள்வது கண்டிப்பாக அனைவருடைய வாழ்விலும் நல்லதொரு மாற்றம் கிடைக்கும்