பாகுபலி கதாநாயகனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் இதன் மூலம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கொடி கட்டிப் பறக்க இருக்கிறார் நடிகர் அருண் விஜய் அவர்கள்
அருண் விஜய் அவர்கள் சமீபத்தில் என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நீண்ட நாட்களுக்குப் பின்பு அறிமுகமானார் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது இந்த வெற்றி வாய்ப்பை அடுத்து வந்த எந்த படமும் அவருக்கு பெரிய வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரவில்லை மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு செக்க சிவந்த வானம் என்னும் திரைப்படத்தில் ஒரு அற்புத நடிப்பை கொடுத்தார் இந்தப் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பலத்தை கொடுத்தது என்றே கூறலாம் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே அருண் விஜய் அவர்கள் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரத்தையே அவர் கச்சிதமாக நடித்து இருந்தார் அது ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது
இதனை தொடர்ந்து தற்போது தடம் என்னும் திரைப்படத்தில் அவர் நடித்து அது மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறது முதல்முறையாக இரட்டை வேடத்தில் அருண் விஜய் அவர்கள் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படமாக இருப்பதாலும் மற்றும் அருண் விஜய் அவர்களின் அசத்தல் நடிப்பின் காரணமாகவும் இந்த திரைப்படம் 140 கோடிக்கும் மேல் வசூலை தமிழகத்தில் மட்டும் எட்டியுள்ளது அருண் விஜய் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் முதல் முதலாக 140 கோடிக்கு மேல் வசூலை சம்பாதித்த முதல் படமாக இந்த தடம் திரைப்படம் அமைந்துள்ளது
மேலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது பாகுபலியின் கதாநாயகனாக பிரபாஸ் அவர்களுடன் இணைந்து நடிக்கிறார் அருண் விஜய் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் அவர்கள் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகின்றன பாகுபலியை தொடர்ந்து 350 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் வெளிவர இருக்கும் பிரபாஸ் படமான சகோ திரைப்படம் தற்பொழுது வெளியாக தயார் நிலையில் உள்ளது இந்த திரைப்படம் தெலுங்கு தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன ஆகவே நடிகர் அருண் விஜய் அவர்கள் தமிழ் திரையுலகை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்களை அதிகம் கவர இந்த திரைப்படம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது