Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் இயங்காது என கூறப்பட்டது.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் முக்கிய அறிவிப்பது வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |