கற்பனை செய்ய முடியாத மரணங்கள் ஐரோப்பாவில் முதியோர் காப்பகங்களில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் இதுவரை கொரோனாவால் பதிவான மரணங்களில் பாதிக்கும் அதிகமானோர் முதியோர் காப்பகங்களில் இறந்ததாக கூறிய உலக சுகாதார நிறுவனம் இது கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத மனித இழப்பு என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியக் கண்டத்தின் பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் கொரோனாவினால் சுமார் ஒரு லட்சம் மக்களுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளனர். நாடு அடிப்படையில் கணக்கிடாமல், இந்தக் கடுமையான புள்ளிவிபரங்கள் சமூக பராமரிப்பில் அரசு அதிக முதலீடு செய்வதற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியும் பேராசிரியருமான கிறிஸ் விற்றிகொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை முதியோர் காப்பகங்களில் குறைத்து மதிப்பிடக் கூடும் என ஒப்புக் கொண்டதை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஹான்ஸ் குளூக் வெளியிட்டுள்ளார்