சர்வதேச வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி மோடி முதலிடம் என்று JP.நட்டா தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் JP.நட்டா தெரிவித்துள்ளார். மார்னிங் கல்ஸ்ட் நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் படி உலக அளவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்கள் இடையே அதிக புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 68% ஆதரவும் கிடைத்துள்ளது. இதனை குறிப்பிட்ட JP. நட்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனாவிற்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்பாக உலகையே பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டும், மறுபுறம் மற்ற நாடுகளுக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் அவர் வழங்கி வருவதாகவும் இவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் உலகத் தலைவர்களின் வரிசையில் அவர் முதலிடம் பிடித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழலில் பிரதமர் மோடி தலைமை மீது நாடு முழு நம்பிக்கை வைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.