Categories
அரசியல்

மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு…… சித்திரை திருவிழாவையொட்டி அதிரடி முடிவு…!!

நாடாளுமன்ற தேர்தலில் மதுரைக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் வரக்கூடிய ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது . தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குபதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மும்மரமாக செய்து வருகிறது . இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18_ஆம் தேதி சித்திரை திருவிழா என்பது மதுரையில் மிக விமரிசையாக நடைபெறும் . ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெறும் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மக்கள் வருவார்கள் .

Image result for வாக்குப்பதிவு மதுரை

இதையடுத்து மதுரையில் தேர்தல் என்பது நடத்துவது என்பது சிரமமாக இருக்கும் என்றும் ,  தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரணை நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Image result for வாக்குப்பதிவு மதுரை

மதுரை தேர்தல் தேதியை மாற்றி அமைக்க முடியாது ஆனால் வாக்களிக்கும் நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்கலாம் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் தற்போது மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |