கொரோனவை குணப்படுத்துமா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம் அது ஒரு மருந்து.
கொரோனா பாதித்த நூற்றுக்கணக்கானோரை வைத்து, அமெரிக்காவில் இது தொடர்பாக ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 368. இதில் உயிர் தப்பிவிடலாம் என்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்தவர்கள் எண்ணிக்கை 97. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் + அசித்ரோமைசினுடன் கலந்து சாப்பிடலாம் என்று சாப்பிட்டவர்கள் 113. கொரோனாவுக்கு மருந்து இல்லை என்று மேலே கூறிய எதையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தவர்கள் 158.
மரண சதவிகிதம் யாருக்கு அதிகம் ?
முதலில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்தவர்களுக்கு தான் மரண சதவீதம் அதிகமாக தெரியவந்துள்ளது. இரண்டாவதாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அசித்ரோமைசினோடு கலந்து எடுத்தவர்களுக்கு மரண சதவீதம் அதிகமாக வந்துள்ளது. கடைசியாக குறைவான மரண சதவீதம் உள்ளவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்தை எடுக்கவில்லை. இந்த 158 பேரில் குறைவான மரண சதவீதம் வந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உண்மையில் கொரோனா வைரசை எதிர்த்து போராட எந்த அளவு கைகொடுக்கும் என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
ஆய்வு ஒன்று முடிவுகள் :
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்தவர்கள் 97% என்று பார்க்கும்போது 27.8 % பேர் மரணம் அடைந்துள்ளனர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் + அசித்ரோமைசினோடு எடுத்துதவர்கள் 113. இதில் மரண சதவீதம் 22. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வேண்டாம், அசித்ரோமைசினும் தேவாயில்லை என நினைத்தவர்கள் 158 பேர். இதில் மரண சதவீதம் 11.4 என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவு:
கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளிப்பது உயிரை காப்பாற்றும் என எந்த உத்தரவாதமும் இல்லை என அழுத்தம் திருத்தமாக ஆய்வின் முடிவில் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மரண சதவீதத்தை பொறுத்தவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுக்காதவர்களை காட்டிலும் அந்த மருந்தை உட்கொண்டவர்களே அதிக பலியாகியுள்ளார் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது புதிதல்ல. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது ஹைட்ராக்ஸி குளோரோகுயின். இப்போ வேற வழி இல்ல, கொரோனவை குணப்படுத்த மருந்து இல்லை, தடுப்பூசி இல்லை. இதன் காரணமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனவை குணப்படுத்தும் மருந்து எதையும் இதுவரை அமெரிக்கா அறிவிக்கவில்லை எனினும் இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தும் ஆர்வம் என்பது வேறு, அறிவியல் என்பது வேறு. கொரோனவை இந்த மருந்து குணப்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தீவிரமாக ஆதரித்த டிரம்ப் இந்த ஆண்டு அமெரிக்காவில் தேர்தலை சந்திக்கிறார் எனபதை நினைவில் கொள்ள வேண்டும் என்று சர்வதேசிய அரசியல் வல்லுநர்கள் தகவல் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.