கொரோனா நோயால் உயிர்ப்பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
* கருஞ்சீரகம் , பப்பாளி, கேரட் ஆகியவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* நாளொன்றுக்கு ஆறு வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* இஞ்சி சட்னி, பூண்டு சட்னி அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
* 3 பூண்டுகளை நசுக்கி பாலில் கலந்து அதனைப் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
* நட்சத்திர சோம்பு அல்லது அன்னாசிப்பூ என்று அழைக்கப்படும் மசாலாப் பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* கிரேவி போன்ற பதார்த்தங்கள் செய்யும் பொழுது இந்த அன்னாசிப் பூவை சேர்த்துக் கொள்வது நல்லது.
* பிறநாட்டு பழங்களை தவிர்த்து உள்ளூரில் விளையும் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்கள்.
* கோழி, மீன் போன்ற அசைவ உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுங்கள்.
* கடைகளிலிருந்து இறைச்சியை வாங்கிய உடனேயே அதை சமைத்து சாப்பிடுவது நல்லது.
* சர்க்கரை நோய் இல்லாதவர்கள் பாலில் தேன் சேர்த்து பருகலாம்.
* சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
* இஞ்சி சாறை எடுத்து அதில் தேன் கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* சப்பாத்தி, கிரேவி போன்ற உணவுகளை தயார் செய்யும் பொழுது அதில் கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பாலில், இஞ்சி, மஞ்சள்தூள், மிளகு, துளசி இலை, ஏலக்காய், பனைவெல்லம், உலர்ந்த திராட்சை இவற்றை எல்லாம் சேர்த்து குடிப்பது நல்லது.
* கருப்பு திராட்சை, பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றையும் அன்றாடம் சாப்பிடுங்கள்.
வைட்டமின் “சி” அதிகம் உள்ள உணவுகள்:
* நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, குடமிளகாய், உலர் திராட்சை, ஆகியவற்றையும் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
* முருங்கை கீரை சூப் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
* கீரையோடு பூண்டு, இஞ்சி சேர்த்து செய்த சூப்பை தினந்தோறும் சாப்பிடுவதாலும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* தக்காளி மிளகு ரசத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* தக்காளி சூப்பில் வெங்காயத் தாள் சேர்த்து குடிப்பதும் நல்லது.
* ஆண்கள் துளசி இலைகளை அளவாக சாப்பிடுங்கள். நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கிராம் அளவிற்கு எடுத்து கொண்டால் போதுமானது.