Categories
தேசிய செய்திகள்

“ஒயிட் அலெர்ட்” NO சொல்லி….. இந்தியாவை காப்பாற்றிய அமித்ஷா….!!

மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பை கண்டு அச்சமடைந்து நாட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சமீப காலமாக பொதுமக்களால் அவ்வபோது தாக்கப்படும் அவலமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஒயிட் அலர்ட் என்ற பெயரில்,

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துவதற்காக மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இந்த தகவலை கேட்டு அறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா  நோ என்ற வார்த்தையை சொல்லி போராட்டம் வேண்டாம். உங்களுக்கு உரிய பாதுகாப்பை சட்டப்படி நாங்கள் வழங்குகிறோம்.

நீங்கள் உங்களது பொன்னான கடமையை தொடர்ந்து செய்யுங்கள். உங்களது சேவை தற்போது நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. எனவே உங்களது பொதுநலமான பணிகளை மென்மேலும் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான வெகுமதிகளை அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |