கொரோனவை தடுக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 15,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கொரோனா வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ உட்கட்டமைப்ப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் 720 மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பிரச்சனை என்பது இத்துடன் முடிந்து விடாது.
இப்போதைக்கு தடுக்கப்பட்டாலும் பின்னர் மீண்டும் தொடங்கலாம், வேறு வடிவத்தில் கொரோனா வைரஸ் என்பது மீண்டும் தலை எடுக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக போதிய அளவில் உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் கவசங்கள் நிறைய அளவில் தேவைபடுகின்றன. என்பதை கணக்கில் எடுத்த மத்திய அமைச்சரவை ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் 7774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.