கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தெலுங்கானா மாநிலம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரவும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. குறிப்பாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு தொடர்ந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதனிடையே இன்னும் 12 நாட்களில் ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற இருப்பதால் மத்திய மாநில அரசுகளுக்கு கொரோனவை முழுமையாக ஒழிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளன. அந்த வகையில் மக்கள் நலன் சார்ந்து அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநிலத்தில் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தெலுங்கானாவில் 928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 194 பேர் குணமடைந்து, 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய உத்தரவை அந்த மாநிலம் பிறப்பித்துள்ளது. அதில், தெலங்கானாவில் தனிமைப்படுத்துதல் காலம் 14 நாட்களில் இருந்து 28 நாட்களாக அதிகரிப்பு என்று தெரிவித்துள்ளார்கள்.