கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஆகையால் அதற்கான தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 10 வயது சிறுமி உட்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மாவட்ட மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தி சூழ்நிலையில், டெங்கு காய்ச்சலை ஒழிக்க மாநகராட்சி தகுந்த நடவடிக்கை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.