Categories
தேசிய செய்திகள்

சூடம் கொளுத்தி… ஆரத்தி எடுத்து வரவேற்ற போலீசார்… வெட்கப்பட்ட மக்கள்!

தானேவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் அவர்கள் வெட்கப்படும் வகையில் ஆரத்தி எடுத்தனர்.. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், தண்டனை வழங்கியும்  வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம்  பாதிக்கப்பட்டு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மும்பை அருகே இருக்கும் தானேவில், காலையிலேயே வழக்கம் போல் சிலர்  ஊரடங்கை மீறி நடை பயிற்சிக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அதற்கு மாறாக வித்தியாசமாக ஒன்றை செய்தனர்.

அதாவது, தட்டில் சூடம் கொளுத்தி ஆரத்தி எடுத்து கைதட்டினர். காவல்துறையினரின் இந்த புதுமையான செயல் ஊரடங்கை மீறியவர்கள் தங்கள் செயலை எண்ணி வெட்கப்படும் படியாக அமைந்து விட்டது. இதனால் அவர்கள் கூனி குறுகி போய்விட்டனர்.

https://twitter.com/VinayMIRROR/status/1252293766582583299

 

 

https://twitter.com/mumbai24am/status/1252598839569244161

Categories

Tech |