Categories
உலக செய்திகள்

அதிக மரணம்…! ”குறைத்து காட்டிய பிரிட்டன்” புள்ளி விவரத்தால் அம்பலம் …!!

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தை விட 41 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது

பிரித்தானியா மற்றும் வேல்ஸில் ஏப்ரல்  10 வரை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட  புள்ளிவிவரங்கள் அதிகமாக எண்ணிக்கையை  காட்டுகின்றது. அதேசமயம் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் 9288 பேர் கொரோனாவால் இறந்ததாக கூறி உள்ளது. ஆனால் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட உண்மையான எண்ணிக்கை 13 121 ஆகும்.

அது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட 41 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டிற்கும் இருக்கும் வேறுபாட்டிற்கு காரணம் ஆரம்ப அரசாங்க புள்ளிவிவரங்கள் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் தேசிய புள்ளிவிவர அலுவலகம் இறப்பு சான்றிதழில் கொரோனா என பதிவு செய்யப்பட்ட அனைவரையுமே பதிவு செய்துள்ளது.

அவர்கள் சந்தேகத்திற்குரிய வழக்காக  இருந்தாலும் மருத்துவமனையை விட்டு வேறு எங்கு இறந்திருந்தாலும் அவர்களையும் எண்ணிக்கையில் சேர்த்துள்ளது. புதிய புள்ளிவிபரங்களின்படி 1043 இறப்புகள் பராமரிப்பு இல்லங்களில் நடந்ததை சுட்டிக்காட்டுகின்றது. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததும் அந்த பராமரிப்பு இல்லங்களில் சோதனை செய்வது குறித்தும் கவலைகள் ஏற்பட்டுள்ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |