Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வறுமை விரட்டுகிறது”… தலையில் வேப்பிலை…நாற்று நடவில் களமிறங்கிய கிராம பெண்கள்..!!

கொரோனா அச்சம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே முககவசம் அணிந்தும், தலையில் வேப்பிலையுடனும் பெண்கள் நாற்று நட தொடங்கியுள்ளனர்.

நாற்று நடவுக்கு இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டாலும் வறுமை விரட்டுவதால் 20 பெண்கள் தலையில் வேப்பிலைகளை சொருகிக்கொண்டு, விவசாய பணியில் இறங்கியுள்ளனர். குலவையிட்டு பாட்டு பாடிக்கொண்டே நாற்று நடும் பெண்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்றாம் போகத்தில் நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள், நெல் விதைப்பு, நாற்று  நடவு அறுவடை என அனைத்தும் எந்திர மயம் ஆகிவிட்ட போதிலும், வேறு வேலைகள் இல்லாததால் விவசாய பணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெண்கள் ஈடுபடுகின்றனர்.

பருவமழை காரணமாக வேப்பந்தட்டை அருகே அரும்பாவூர் கிராமத்தில் இரண்டு ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் நாற்று நடவு தீவிரம் அடைந்து இருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக முக கவசத்துடன் தலையில் வேப்பிலையை சொருகிக் கொண்டு உற்சாகமாக சேற்றில் இறங்கி விட்டனர் பெண்கள். சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாது அரும்பாவூர் மட்டுமல்ல சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் நாற்று நடவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் நிலையில் வறுமை விரட்டுவதால்  நில உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்து விவசாய பணிக்கு திரும்பியுள்ளனர் பெண்கள். 100 நாள் வேலை, சித்தாள் வேலை இல்லாததே இதற்கு காரணம். எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் வறுமையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமத்துப் பெண்கள் சேற்றில் கால் வைத்துள்ளனர்.

Categories

Tech |