Categories
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு 150கி.மீ நடந்தே சென்ற 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊரான பிஜாப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார்.

தெலுகானாவில் இருந்து சுமார் 11 பேர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூருக்கு நடந்தே வந்துள்ளனர். கண்ணிகுடா கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரியும் ஜாம்லோ மக்தாம் மட்டும் சிறுமியின் ஊரை சேர்ந்த ஒரு மக்கள் குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினர். இவ்ரகள் கடந்த ஏப்ரல் 18ம் தேதி காலை பிஜாப்பூரில் உள்ள பண்டர்பால் கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் இறப்பு குறித்து சோதனை மேற்கொண்ட மருத்துவ அதிகாரிகள், சிறுமி கொரோனா உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது, ” சிறுமி பணிபுரிந்த தெலுங்கானாவிற்கும் பிஜாப்பூருக்கும் இடையிலான தூரம் 150 கிலோமீட்டர், இவர் கடந்த 18ம் தேதி தனது சொந்த கிராமத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்பொழுது உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமி கடந்த 18 ம் தேதி (சனிக்கிழமை) காலை உணவு உட்கொண்டார். அதன்பிறகு வயிற்று வலி மற்றும் உடல்நலக்குறைவு குறித்து புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து அன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ளார். சோர்வு, எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு அல்லது நீரிழப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்று பிஜாப்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பி.ஆர்.புஜாரி கூறினார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், இது போன்று பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனையை தருகிறது. மேலும், 12 வயது சிறுமி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |