Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கிட்ட சக்தி இல்ல… வெறுப்பேத்திய இஷாந்த்… செம கடுப்பான தோனி..!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தன்னுடைய பேட்டிங்கால் தோனியை  கடுப்பாக்கினேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பிற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களிடையே உரையாற்றி வருகின்றனர்.

இதில் சில வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா தோனி குறித்து மகிழ்வான தருணங்களை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ்  மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையே நடந்த போட்டி குறித்து விவரித்துள்ளார். அந்த போட்டியில், தோனியை எவ்வாறு வெறுப்பேத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது நான் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியின் போது நான் பேட்டிங் செய்ய வந்தேன்.. ஸ்டம்புக்கு பின்னாடி இருந்த தோனி என்னிடம் உன்னால் சிக்ஸர்  எல்லாம் அடிக்க முடியாது. உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் திறமை இல்லை என கிண்டலடித்தார். அப்போது ஜடேஜா வீசிய முதல் பந்தை 4 ரன்னுக்கு விரட்டினேன் என்றார் இசாந்த் சர்மா.

மேலும் தொடர்ந்த அவர், இதற்கு அடுத்து ஜடேஜா வீசிய அடுத்த பந்தை சிக்சருக்கு அடித்தேன். அப்போது தோனியின் முகத்தை திரும்பி பார்த்தேன். அவர் மிகவும் எரிச்சலுடன் ஜடேஜாவை பார்த்து திட்டி கொண்டிருந்தார் என்றார் இஷாந்த் சர்மா. அந்த போட்டியில் இறுதியாக சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |