தங்கள் நாடு கொரோனா சங்கிலியை உடைத்து விட்டதால் அடுத்த திங்களன்று கட்டுப்பாடுகளை தளர்த்த போவதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நான்காம் நிலை கட்டுப்பாட்டினை ஏப்ரல் 27ஆம் தேதி முடித்துக்கொள்ள இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடேர்ன் தெரிவித்துள்ளார். மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க மே 11 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும். மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின்கீழ் பள்ளிகள் திறக்கப்படும்.
கட்டுமானம் மற்றும் வனத் துறை தொடர்பான நிறுவனங்கள் உட்பட தொழில்நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். நான்காம் நிலையில் கடினமான கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர். உணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டது இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டிருந்த நியூசிலாந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது