Categories
உலக செய்திகள்

மசூதி துப்பாக்கி சூடு : கொடூரன் அனுப்பிய அறிக்கையை படித்து பதறிய பிரதமர்..!!

நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சம்பவம் நடைபெறுவதற்கு 09 நிமிடங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரமருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். 

நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில்  துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்த  ஆஸ்திரேலிய  கொடூரனிடமிருந்து, சம்பவம் நடைபெறுவதற்கு, 09 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கை கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று காலை, செய்தியாளர்களிடம் பேசிய  நியுசிலாந்து  பிரதமர் ஜெசிந்தா , துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், தமக்கு மட்டும் அறிக்கையை அனுப்பியது மட்டுமல்லாமல், தன்னைப்போல 30 முக்கிய நபர்களுக்கு, மின்னஞ்சல் மூலம், அந்த நபர், ஏற்கனவே நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை குறிப்பிட்டு, அந்த அறிக்கையை அனுப்பியிருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

Image result for New Zealand Prime Minister

தமக்கு அந்த அறிக்கை வந்ததும் அடுத்த 2ஆவது நிமிடத்தில், யார் அந்த நபர், எங்கு தாக்குதல்  என்பது பற்றி உடனடியாக விசாரித்து அறிந்து, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த இடத்தில், எப்போது தாக்குதல் என அவன்,அனுப்பியிருந்த  அந்த மின்னஞ்சலில் குறிப்பிடாததால், அவன் அரங்கேற்றிய கொடூர துப்பாக்கி சூட்டை உரிய நேரத்தில் தடுக்க முடியாமல் போய் விட்டது என்றும், அவர் வருத்தத்துடன்  வெளியிட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த கொடூரன் அனுப்பிய அறிக்கையை படித்து முடித்த அடுத்த நொடியே பதறிப் போய்விட்டதாகவும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.

Categories

Tech |