Categories
உலக செய்திகள்

நீங்க சொல்லுறது பொய்….!! அப்படிலாம் பண்ண முடியாது – சீனா பதிலடி …!!

கொரோனா வைரஸை மனிதர்களால் உருவாக்க முடியும் என்பது சாத்தியமற்ற செயல் என வூஹான் வைராலஜி இன்ஸ்டியூட்டின் இயக்குனர் தெரிவித்துள்ளார்

சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து வெளிவந்தது என கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த இன்ஸ்டியூட் கொடுத்துவந்த நிதியை நிறுத்த போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இன்ஸ்டியூட்டின் இயக்குனர் யுவான் ஜிமிங் டெலிவிஷன் ஒன்றில் பேட்டி அளித்த பொழுது கூறியதாவது, “எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் என்ன வகையான ஆராய்ச்சியை மேற்கொள்கிறோம் ? அது எவ்வாறு செயல்படுகிறது ? என்பதை நாங்கள் முழுவதும் அறிவோம். எந்த ஒரு வைரஸும் எங்களிடம் இருந்து வருவதற்கு வழி கிடையாது.

நாங்கள் கடுமையான விதிகளை பின்பற்றியே செயல்படுகின்றோம் அதனால் நாங்கள் நம்பிக்கையுடனே இருக்கின்றோம். எங்களது இன்ஸ்டியூட் வூஹான் நகரில் இருப்பதால்  மக்கள் உதவ முடியாது ஆனால் எங்களை அவர்களால் தொடர்பு கொள்ள முடியும். எங்களது இன்ஸ்டியூட்டில் இருந்து செயற்கையாக வைரஸ் உருவாக்கப்பட்டு வெளிவந்ததாக  அமெரிக்க கூறுவது துரதிர்ஷ்டவசமானது.

 

எந்தவித ஆதாரமும் இன்றி மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். யூகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு நடந்து கொள்கின்றனர். மக்களை குழப்புவதும்,  எங்களது அறிவியல் நடவடிக்கைகளில் தலையிடுவதுமே இதற்கான நோக்கங்கள். இந்த நோக்கங்களும் ஒரு விதத்தில் நிறைவேறி இருக்கலாம்.

ஒரு விஞ்ஞானி என்ற முறையில் ஆய்வுக்கூடத்தில் செயற்கையான முறையில் வைரஸை உருவாக்குவது என்பது சாத்தியமற்ற செயல் என எனக்குத் தெரியும். மனிதனால் வைரஸை உருவாக்க முடியாது. செயற்கையாக உருவாக்கப்பட்டது கொரோனா வைரஸ் எனும் ஆதாரம் இதுவரை இல்லை. சில விஞ்ஞானிகள் வைரஸை தொகுக்க மிகப்பெரிய உழைப்பும் அசாதாரணமான நுண்ணறிவும் தேவை என நம்புகின்றனர்.

இந்த வைரஸை உருவாக்கக் கூடிய திறன் மனிதர்களிடம் உள்ளது என்பதை நாங்கள் ஒருபோதும் நம்பவில்லை. கொரோனா பரவிய தொடங்கியதுமே அதன் மரபணு வரிசையையும் விலங்கு மாதிரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியையும் உணவு மற்றும் விவசாய நிறுவனத்துடனும் உலக சுகாதார நிறுவனத்துடனும் பகிர்ந்துள்ளோம்.

Categories

Tech |