இங்கிலாந்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 210 நாடுகளில் வைரஸ் பரவி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 24 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது. இங்கிலாந்தில் நேற்று 5,850 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 600பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.